20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்... வெஸ்ட் இண்டீசை 20 ரன்களில் வீழ்த்தியது இலங்கை...

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்... வெஸ்ட் இண்டீசை 20 ரன்களில் வீழ்த்தியது இலங்கை...

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபியில் நடைபெற்ற 35-வது ஆட்டத்தில், வெஸ்ட்  இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வெஸ்ட்  இண்டீஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில், தொடக்க ஆட்டக்காரர் நிசங்கா அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய அசலங்கா, 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20  ஓவர்கள் முடிவில் இலங்கை அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. நிகோலஸ் பூரன் 46 ரன்னில் அவுட் ஆக, மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஓரளவு தாக்குப்பிடித்த ஹெட்மயர், இறுதிவரை போராடி 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இருப்பினும், 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.