2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 229 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இந்தியா 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 240 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு, தென்னாப்பிரிக்க அணி தமது 2-வது இன்னிங்சை தொடங்கியது.

வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், மழை காரணமாக 4-வது நாள் ஆட்டம் தாமதாக தொடங்கியது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 67 புள்ளி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1 க்கு 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.