ஷேன் வார்னேவின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்...ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு.!!

மாரடைப்பால் மரணமடைந்த ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

ஷேன் வார்னேவின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்...ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு.!!

1969ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி விக்டோரியா ஆஸ்திரேலியாவில் பிறந்த ஷேன் வார்னே, கடந்த 1992ஆம் ஆண்டு இந்தியாவுடனான சர்வதேச டெஸ்ட் போட்டியில்  அறிமுகமானார். 

ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்திய ஷேன் வார்னே, தனது சுழற்பந்து வீச்சு திறமையால் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தார். இதுவரை 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 293 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று லண்டனில் வசித்து வந்த ஷேன் வார்னே,  கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் நேற்று  உயிரிழந்துள்ளார். அவரது திடீர் மறைவு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ஷேன் வார்னேவுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் வார்னேவும் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார். அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.