தோல்வியுடன் நிறைவுபெற்றது - சானியா மிர்சாவின் விளையாட்டு பயணம்..!

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் விளையாட்டு பயணம் முடிவடைந்துள்ளது. 

தோல்வியுடன் நிறைவுபெற்றது - சானியா மிர்சாவின் விளையாட்டு பயணம்..!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் விளையாடி வந்த சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் தனது தோல்வியை சந்தித்தார். குரோஷியாவின் மேட் பெவிக்குடன் இணைந்து சானியா மிர்சா விளையாடி வந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த டெசிரே கிராசிக் மற்றும் இங்கிலாந்தினுடைய நீல் குப்ஸ்கியிடம் ஒரு தோல்வியை சந்தித்துள்ளார். 

நடப்பு ஆண்டின் விம்பிள்டன் தொடருடன் தனது விளையாட்டி பயணம் நிறைவடைந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்து இருந்தார் சானியா மிர்சா. எனவே விம்பிள்டன் தொடரில் இவர் பங்கேற்று விளையாடுவது தான் இந்தியாவுக்காக இவர் ஆடும் கடைசி ஆட்டமாகவும் இருக்கும் என எதிர்பாக்கப்பட்டது. 

சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் மூன்று முறையும் , மகளிர் இரட்டையர் பிரிவில் மூன்று முறையும்  கிராண்ட் ஸ்லாம் என்கிற பட்டங்களை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது கடைசி விளையாட்டு பயணம் தோல்வியில் முடிந்திருப்பது வறுத்ததை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.