அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்களின் வரிசையில் ரொனால்டோ..!!

அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்களின் வரிசையில், மெஸ்ஸியை முந்தியுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்களின் வரிசையில் ரொனால்டோ..!!

உலக கால்பந்து தரவரிசையில், அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை அண்மையில் வெளியிட்டது.

அதில் ரொனால்டோ அதிக சம்பளம் பெறுபவராக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து பி.எஸ். ஜி. அணிக்கும் ரொனால்டோ யுவான்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும் சென்ற பின்னரே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

ரொனால்டோ வரியுடன் சுமார் 923 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் போனஸ் பெறுவதாகவும், மெஸ்ஸி 812 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.