விராட் கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ரோகித் சர்மா!!..

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா கேப்டன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார். 

விராட் கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ரோகித் சர்மா!!..

சர்வதேச டெஸ்ட் பெட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் 773 புள்ளிகளுடன் ரோஹித் ஐந்தாவது இடத்திலும், 766 புள்ளிகளுடன் விராட் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.இதன் மூலம், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் டாப் ஐந்து இடங்களில் இருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேனானார் ரோஹித் ஷர்மா. அதுமட்டுமின்றி, தனது டெஸ்ட் கிரிக்கெட் கரியரில் முதல் முறையாக டாப் 5 இடத்திற்கு ரோஹித் ஷர்மா முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 916 புள்ளிகளுடன் ஜோ ரூட் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்கஸ் லபுசானே ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

 பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 839 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் 908 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 758 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.