ஓய்வை அறிவித்தார் ரோஜர் ஃபெடெரர்!!!

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடெரர், தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது அவர் ரசிகர்களுக்கு மன வேதனை அளிக்கிறது.

ஓய்வை அறிவித்தார் ரோஜர் ஃபெடெரர்!!!

தற்போது லண்டனில் நடந்து வரும் ‘லேவர் கோப்பை’யைத் தொடர்ந்து, உலக டென்னிஸ் வீரர்களில் சிறந்தவர்களில் ஒருவராக இருக்கும் ஜாம்பவான் ரோஜர் ஃபெடெரர், தனது 41வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார். இது வீலையாட்டுத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 வருடங்களாக, டென்னிஸ் விளையாட்டில், ஒரு தனி இடம் பிடித்து, அந்த இடத்தை அத்தனை வருடங்களுக்கும் தக்க வைத்துக் கொண்ட ரோஜருக்கு, உலக அளவில் ரசிகர்கள் உண்டு. டென்னிஸ் மட்டுமின்றி, மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு ஜாம்பவானாகத் திகழ்பவர் தான் ரோஜர். அவரது 24 வருட டென்னிஸ் பயணம் அடுத்த வார போட்டிகளுடன் நிரைவுக்கு வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Roger Federer, Swiss tennis great, announces he's leaving the sport

2003ம் ஆண்டு தொடங்கிய இவரது வெற்றி பயணத்தில், 6 ஆஸ்திரேலிய சந்திப்புகள், 1 ஃப்ரெஞ்சு சந்திப்பு, 8 விம்பிள்டன் சந்திப்புகள் மற்றும் 5 அமெரிக்க சந்திப்புகளின் வெற்றி மகுடமும் இருக்கிறது.

20 கிராண்ட் ஸ்லாம் டைட்டிள்களுடன் லெஜெண்டாகிய ரோஜருக்கு, சமீபத்தில் காலில் அடிப்பட்டு, அந்த காயத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ரஃபேல் நடால் (Rafael Nadal) மற்றும் நொவாக் ஜொகோவிக் (Novak Djokovic) ஆகியோருக்கு அடுத்து, மிக அதிகமான கிராண்ட் ஸ்லாம் டைட்டில்களை வென்றவராக மூன்றாவது இடத்தில் ரோஜர் இருக்கிறார்.

தனது ஓய்வு குறித்து ஒரு பெரிய கடிதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவாக பகிர்ந்திருக்கிறார் அவர். இதனைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் அவருக்கு பதில் பதிவிட்டு, தங்களது வருத்தங்களையும், அவரது பயணத்தை வாழ்த்தியும், பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.