அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு: லசித் மலிங்கா அறிவிப்பு

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா அறிவித்துள்ளார்.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு: லசித் மலிங்கா அறிவிப்பு

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த மலிங்கா, டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். எனினும், உள்ளூரில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், டி20 உள்பட அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்கா, அதன்பின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

38 வயதாகும் 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பதும் அவர் 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை மூன்று போட்டிகளிலும் சேர்ந்து எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது அதிரடி யார்க்கர்களால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்த மலிங்கா, ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி, முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.