ஐபிஎல் லீக் போட்டியில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான்!

ஐபிஎல் லீக் போட்டியில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் அணி  பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது.

ஐபிஎல்  லீக் போட்டியில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 68 வது லீக் போட்டியில் சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய டெவோன் கான்வேம், அம்பதி ராயுடு, ஜெகதீசன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் துவக்கத்தில் இருந்தே ராஜஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்து கொண்டிருந்த மொயின் அலியுடன் மகேந்திர சிங் தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மொயின் அலி 93 ரன்கள் குவித்தார்.

151 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய  ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ராஜஸ்தான் அணி தடுமாறிய நிலையில் சிறப்பாக ஆடிய அஸ்வின் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார், இதனால் 19 புள்ளி 4 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றீயின் மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதுடன் புள்ளீப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.