இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆகிறார் ராகுல் டிராவிட் ?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் விண்ணப்பித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆகிறார்  ராகுல் டிராவிட் ?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் விண்ணப்பித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் விண்ணப்பித்துள்ளார். தற்போது தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நடந்து வரும் டி20 உலகக்கோப்பையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும், தற்போது தேசிய கிரிக்கெட் பயிற்சி கழகத்தின் தலைவராக இருந்து வரும் ராகுல் டிராவிட் நியமிக்கபடுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இந்நிலையில் புதிய பயிற்சியாளர் பதவிக்கு கடைசி நாளான நேற்று அவர் முறைப்படி விண்ணப்பித்துள்ளார்.