209 ரன்கள் டார்கெட்.. தடுமாறிய பெங்களூரு அணி.. தட்டிய தூக்கிய பஞ்சாப் அணி.. வெற்றிக்கு முக்கிய காரணம் யார் தெரியுமா?

பெங்களூரு பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

209 ரன்கள் டார்கெட்.. தடுமாறிய பெங்களூரு அணி.. தட்டிய தூக்கிய பஞ்சாப் அணி.. வெற்றிக்கு முக்கிய காரணம் யார் தெரியுமா?

ஐபிஎல் 15வது சீசனின் 60 ஆவது லீக் போட்டியில், பெங்களூரு  - பஞ்சாப்  அணிகள் மோதின. முதலாவதாக டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. தொடக்கத்திலேயே பஞ்சாப் அணி வீரர்கள் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினர்.

2 வது ஓவரிலேயே ஜானி பேர்ஸ்டோ 2 சிக்ஸர், 2 பவுண்டரி பறக்க விட, மறுபுறம் நிதனமாக விளையாடிய தவான் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அடுத்தடுத்து களம் கண்டவர்களும் விரைவில் ஆட்டம் இழக்க, பேர்ஸ்டோ நிதானமாக ஆடி அணிக்கு வலு சேர்த்தார்.

தொடர்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டனும் அதிரடி காட்டினார். அதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 209 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.

வெற்றிக்கு 210 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களம் கண்ட பெங்களூரு அணியில், தொடக்கத்திலேயே கோலியும் கேப்டன் டூ பிளெசிஸும் அடுத்தட்ய்த்துஅவுட் ஆகி ஏமாற்றத்தையே கொடுத்தனர்.

அதன்பின் வந்த ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் அணிக்கு ரன்களை சேர்த்துக் கொடுத்தனர். ஆனாலும், படிதார் 26  ரன்களிலும் மேக்ஸ்வெல் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் அடுத்தடுத்து களம் கண்ட வீரர்களின் ரன் குவிப்பிலும் தொடர் சரிவு ஏற்பட்ட நிலையில், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

ராபாடாவின் பந்துவீச்சு பெங்களூரு அணியை திணறச் செய்தது. இதன்மூலம் பெங்களூரு அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.