புதிய விதியால் சென்னை ஐ.பி.எல் அணிக்கு பிரச்சினை?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவை தக்க வைக்கும் வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

புதிய விதியால் சென்னை ஐ.பி.எல் அணிக்கு பிரச்சினை?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவை தக்க வைக்கும் வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் லீக் போட்டியான ஐ.பி.எல். தொடர், கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், செப்டம்பரில் மீண்டும் தொடங்க உள்ளது. இதற்கிடையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளதால், அதற்காக வரும் டிசம்பரில் வீரர்களுக்கான மெகா ஆக்சன் நடக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் நிலையில், இம்முறை 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், 3 இந்திய வீரர்கள் 1 வெளிநாட்டு வீரர் அல்லது தலா 2 இந்தியர் மற்றும் வெளிநாட்டு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். 

இந்த புதிய விதியின்படி, சென்னை அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சீசனில் முதல்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணியில், இந்தாண்டு சாம் கர்ரன், மொயீன் அலி, ருத்துராஜ் கெயிக்வாட், பாப் டு பிளிசிஸ் என பல வீரர்கள் நன்றாக விளையாடினாலும், அதே சமயம் தோனி, ரெய்னா, ஜடேஜா என நட்சத்திர வீரர்களும் இருப்பதால் சென்னை அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் எனத் தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், தோனி மற்றும் ரெய்னாவை தக்கவைக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.