கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்... முதல் வெற்றியை பதிவு செய்த பெரு அணி...

கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் கொலம்பியா அணியை வீழ்த்தியது பெரு அணி.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்... முதல் வெற்றியை பதிவு செய்த பெரு அணி...
தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. 
 
இதில் கோயானியாவில் நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் கொலம்பியா மற்றும் பெரு அணிகள் மோதின. போட்டியின் 17வது நிமிடத்தில் பெருவின் செர்ஜியோ பினா கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். 
 
இரண்டாவது பாதி தொடங்கிய சிறிது நேரத்திலேயே கொலம்பியாவின் மிகுல் போர்ஜா பதில் கோல் திருப்ப, 1-1 என போட்டி சமநிலையில் இருந்தது. பின்னர் 64ஆவது நிமிடத்தில் கொலம்பியாவின் எர்ரி மினா எதிர்பாராத விதமாக சுய கோல் போட்டதால், 2-1 என்ற கோல் கணக்கில் பெரு அணி முதல் வெற்றியை பெற்றது
 
முன்னதாக ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், வெனிசுலா மற்றும் ஈக்குவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சமபலம் பொருந்திய 2 அணிகள் மோதிய இந்த ஆட்டம் பரபரப்பாக இருந்தது. ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் தலா 2 கோல்களை அடித்ததால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.