பாரலிம்பிக் டேபிள் டென்னிஸில் வெள்ளி பதக்கம் வென்றார் பவினாபென் பட்டேல்

டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், அபாரமாக விளையாடிய இந்தியாவின் பவினாபென் பட்டேல் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

பாரலிம்பிக் டேபிள் டென்னிஸில் வெள்ளி பதக்கம் வென்றார் பவினாபென் பட்டேல்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியானது கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பவினா பென் பட்டேல் களமிறங்கினார். துவக்கம் முதல் அபார திறமையை வெளிப்படுத்தி விளையாடிய அவர், அரையிறுதியில் சீனா விராங்கனையை வீழ்த்தும்  இறுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றார்.

இந்தநிலையில் அவர் பங்கேற்கும் இறுதி போட்டியானது இன்று காலை நடைபெற்றது. முன்னதாக இறுதிப்போட்டியை நேரலையில் காண பவினா பட்டேல் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றாக திரண்டிருந்தனர்.  

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில், சீனா வீராங்கனை Zhou Ying-ஐ எதிர்கொண்ட  பவினா பட்டேல், போராடி தோல்வியை தழுவினார். இதனால்  பவினா பட்டேலுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

இந்தநிலையில், பவினா பட்டேல் பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவரது மெஹ்சானா ஊர் மக்கள்  மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவரது வெற்றியை முன்னிட்டு பட்டாசு வெடித்து, கொண்டாடினர்.