245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 244 ரன்கள் குவித்தது.

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 4-ம் தேதி நியூசிலாந்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடும் லீக் போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியினர் பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் களம் கண்டுள்ளன.

முதலில் டாஸ் வென்ற மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணி துவக்க ஆட்டக்காரர் ஸ்மிரிதி மந்தனா 52 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை தந்த நிலையில், மூன்றாவதாக களமிறங்கிய தீபிகா ஷர்மா 40 ரன்கள் எடுத்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

இருப்பினும், கடைசியாக களமிறங்கிய ஸ்னே ரானா மற்றும் பூஜா அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இதனையடுத்து இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்தது. 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.