20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்... ஸ்காட்லாந்தை பாகிஸ்தான் அணி...

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்... ஸ்காட்லாந்தை பாகிஸ்தான் அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஷார்ஜாவில் நடைபெற்ற 41-வது ஆட்டத்தில், சூப்பர்-12 சுற்றின் குரூப் 2 பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் அரை சதம் கடந்து 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சோயப் மாலிக் 54 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

இதனையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது. இதில் ரிச்சி பெர்ரிங்டன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.