துபாய் செல்லும் அனைத்து இந்திய வீரர்களையும் 6 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, இங்கிலாந்தில் இருந்து துபாய் செல்லும் அனைத்து வீரர்களையும் 6 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

துபாய் செல்லும் அனைத்து  இந்திய வீரர்களையும் 6 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு...

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கிருந்து ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்பதற் காக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளனர். அவர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத் தப்பட்டு, அதன் பின்னர் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் உள்ள வீரர்களுடன் இணைய வேண்டும் என பி. சி. சி.ஐ. தெரிவித்துள்ளது. இதனை உறுதி செய்யும்படி அணி நிர்வாகங்களுக்கு பி. சி. சி.ஐ. தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், மான்செஸ்டரில் இருந்து தங்கள் வீரர்களை சிறப்பு விமானங்கள் மூலம் துபாய் அழைத்து செல்லும் முயற் சியில் ஐ.பி.எல் அணிகளின் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.