தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு - 41 அடி உயரத்துக்கு கட் அவுட் வைத்து கலக்கும் ரசிகர்கள்!

தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு - 41 அடி உயரத்துக்கு கட் அவுட் வைத்து கலக்கும் ரசிகர்கள்!

கிரிக்கெட் ஜாம்பாவன் தோனியின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் உருவ படத்தை வைத்து 41 அடிக்கு அவரது ரசிகர்கள் கட் அவுட் அமைத்திருக்கிறார்கள். 

கிரிக்கெட் என்று சொன்னாலே நமக்கு எல்லாம் முதலில் நினைவுக்கு வருவது நம்ம தல தோனி தான். அப்படிப்பட்ட கிரிக்கெட் உலகத்தில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் மகேந்திர சிங் தோனி. ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவரை மகி, தல என செல்லமாக அழைப்பதும் உண்டு.

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் தோனி இன்று கிரிக்கெட்டை ரசிக்கும் பல குடும்பங்களுக்கு செல்ல பிள்ளையாகவும் இருக்கிறார். இவர் 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். 

தோனியின் தலைமையில் இந்திய அணி சுமார் 3 ஐசிசி கோப்பைகளை வென்று இருக்கிறது. அதனோடு 28 ஆண்டுகளுக்கு பின்னதாக 2011 ஆம் ஆண்டின் பொழுது உலகக் கோப்பையையும் வென்று இந்தியாவின் கனவை நினைவாக்கி உள்ளார் மகேந்திர சிங் தோனி. 

தோனி என்று சொன்னாலே ஏதோ ஒரு அதிர்வு அனைவருக்குள்ளும் வரும். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி நாளை தனது 41- வது பிறந்த நாளை காண இருக்கிறார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு  ஆந்திர மாநிலமான விஜயவாடாவில் தோனியின் 41 அடி உயர  கட் - அவுட்டை ரசிகர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர்.