தமிழ்நாட்டில் 4 இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைக்கப்படும்!  

தமிழகத்தில் நான்கு இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைக்கப்பட்டு அடுத்த ஒலிம்பிக்கிற்கு  50 வீரர்கள் தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 4 இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைக்கப்படும்!   

சட்டப்பேரவையில்  பேசிய அவர் நீலகிரி மாவட்டம் உதகையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் மலை மேலிட பயிற்சி மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும்,  சென்னையில் பாய்மர படகோட்டுதல் அகாதமி மற்றும் பாய் படகோட்டுதலுக்கான முதன்மை நிலை மையம் அமைக்க அரசு 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விளையாட்டு வசதிகள் இல்லாத 209 சட்டமன்ற தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும் என்றும் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கான தொகை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாகவும்மெய்யநாதன் கூறினார்.

தமிழகத்தில் நான்கு இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைக்கப்பட்டு 2024ம் ஆண்டுக்குள் ஒலிம்பிக்கிற்கு தமிழகத்தில் இருந்து 50 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.2.5 கோடியில் கெனாயிங் மற்றும் கயாக்கிங் நீர் விளையாட்டுகளுக்கான முதன்மை நிலை மையம்  அமைக்கப்படும் எனவும் பேரவையில் அறிவித்தார்.

அதேபோல் இறகுபந்து மற்றும் மேஜைப்பந்து விளையாட்டிற்கான முதன்மை நிலை மையங்கள் 13 கோடியே 33 லட்ச ரூபாய்  செலவில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.