ஒலிம்பிக் போட்டி: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை?

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டி: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை?

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், டோக்கியோ மாகாணத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  அங்கு புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.