கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. தினேஷ் கார்த்திக்கின் மனைவி பற்றி சர்ச்சை... டென்ஷனான ஹர்ஷா போக்லே!!

ஐபிஎல் தொடரில் நல்ல பினிஷெராக வலம் வரும் தினேஷ் கார்திக்க்கை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி நிலையில், அவரின் மனைவி குறித்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. தினேஷ் கார்த்திக்கின் மனைவி பற்றி சர்ச்சை... டென்ஷனான ஹர்ஷா போக்லே!!

நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது. இந்த போட்டியில் என்ன தான் சிஎஸ்கே அணி வென்றாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தினேஷ் கார்த்திக் தான்.

நடப்பு தொடரில் ஒவ்வொரு போட்டிகளிலும் ஆர்சிபி அணிக்காக நின்று விளையாடி கொடுத்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்பவர்  தினேஷ் கார்திக். நேற்றைய ஆட்டத்தில் 133 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்திருந்த நிலையில், களத்தில் இறங்கிய தினேஷ் கார்த்திக், 14 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். அவரின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்த தோனி இவர் தான் என புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிக்கல், ஸ்குவாஸ் வீராங்கனை ஆவார். அவர் கலப்பு பிரிவு மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவு என இரண்டிலுமே சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இது குறித்து செய்து வெளியிட்ட தனியார் ஊடகம், தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிக்கல் சாம்பியன் பட்டம் வென்றதாக பதிவிட்டது. இதனை கண்டு டென்ஷன் ஆன பிரபல கிரிக்கெட் வல்லுநர் ஹர்ஷா போக்லே, "தீபிகா பல்லிக்கல் தன்னந்தனியாக சாதித்துள்ளார். கணவரின் பெயரை முன்னர் வைத்து செய்தி வெளியிடுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. இதனால் ரசிகர்கள் அந்த தனியார் நிறுவனம் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.