பாகிஸ்தானில் விளையாடினால் பாதுகாப்பு இல்லை: கடைசி நேரத்தில் தொடரை ரத்து செய்து வெளியேறிய நியூசிலாந்து அணி...

பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து அணி ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தானில் விளையாடினால் பாதுகாப்பு இல்லை: கடைசி நேரத்தில் தொடரை ரத்து செய்து வெளியேறிய நியூசிலாந்து அணி...

பாகிஸ்தான் நாட்டில் 18 ஆண்டுகளுக்கு பின்பு நியூசிலாந்து அணி சுற்று பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 விளையாட இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி முழு சுற்றுப் பயணத்தையும் ரத்து செய்தததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டேவிட ஒயிட் எங்கள் நாட்டு அரசின் பாதுகாப்பு ஆலோசனை குழு மூலம் பாகிஸ்தானில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுபோன்ற சூழலில் எங்கள் வீரர்களின் உயிர் முக்கியமானதாக கருதி, இந்தச் சுற்றுப் பயணத்தை ரத்து செய்கிறோம். இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பேரிழப்பாக இருக்கும். ஆனால் வீரர்கள் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்  எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நியூசிலாந்து பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் பிரதமர் பேசினார். உலகளவில் சிறந்த புலனாய்வு அமைப்பு எங்களிடம் உண்டு. அதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார். நியூசிலாந்து அணியின் பாதுகாப்பு அதிகாரிகளும் எங்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருப்தியை வெளிப்படுத்தினார்கள். கடைசி நேர விலகலால் பாகிஸ்தான் மற்றும் சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.