இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது நியூசிலாந்து அணி....

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை டி20 அரையிறுதிப் போட்டியில், மிட்செலின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது நியூசிலாந்து அணி....

அபுதாபியில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்களை எடுத்தது.  தாவித் மாலன் 30 பந்தில் 41 ரன்களும், மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ரன்கள் சேர்த்தனர். 

இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் அந்த அணி 13 ரன்களை எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 3வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல், டேவன் கான்வே ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.

டேவன் கான்வே 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின் வந்த கிளென் பிலிப்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருகட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 4 ஓவரில் 57 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் ஜேம்ஸ் நீஷம் மற்றும் டேரில் மிட்செல் எதிரணியினரின் பந்துகளை துவம்சம் செய்தனர். இதனால் நியூசிலாந்து அணி  19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது.