மெஸ்ஸியிடம் ஆயிரக்கணக்கான யூரோக்கள், நகைகள் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்...

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியிடம் ஆயிரக்கணக்கான யூரோக்கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெஸ்ஸியிடம் ஆயிரக்கணக்கான யூரோக்கள், நகைகள் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்...

பார்சிலோனா அணிக்காக ஆடிய மெஸ்ஸி சமீபத்தில் பிஎஸ்ஜி அணிக்காக மாறினார். அப்போதிருந்த மெஸ்ஸியும் அவரின் குடும்பத்தாரும்  பாரீஸ் நகரில் உள்ள லி ராயல் மொனிசா எனும் ஹோட்டலில் மெஸ்ஸி உள்ளிட்ட ஏராளமான பயணிகள் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு ஹோட்டலின் பால்கணிப்பகுதி வழியாக நுழைந்த கொள்ளையர்கள், மெஸ்ஸி தங்கியிருந்த அறைக்குள் புகுந்தனர். ஹோட்டல் அறையில் மெஸ்ஸி, அவரின் மனைவி வைத்திருந்த ஆயிரக்கணக்கான யூரோ, பவுண்ட் பணம், நகைகளை கொள்ளையடித்து திருடர்கள் தப்பியுள்ளனர்.

மெஸ்ஸி அறை மட்டுமல்லாமது, அந்த ஹோட்டலில் தங்கியிருந்த பலரின் உடைமைகள், நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தி சன் நாளேடு வெளியிட்ட செய்தியில்,  பாரீஸ் நகரில் உல்ள லீ ராயல் மொனிசா ஹோட்டலில் தங்கியிருந்த கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி உள்ளிட்ட 4 பேரின் அறைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் ஏராளமான நகைகள், பணம் பறிபோயுள்ளது.

இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை ஆய்வுசெய்து, பாதுகாப்பு குறைபாடுகளால் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் சாதாரணமான கொள்ளையர்களால் நடத்தப்பட்டிருக்க முடியாது, மிகவும் கை தேர்ந்த கொள்ளையர்களால் கொள்ளை நடந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. தினமும் ஹோட்டலின் குவியும் ரசிகர்களை பால்கணிவழியாகவே சென்று மெஸ்ஸி சந்திப்பார். இந்த பால்கணி வழியாகவே தற்போது கொள்ளையர்கள் வந்து கொள்ளையடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.