ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய்….  

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.  

ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய்….   

32-வது ஒலிம்பிக் திருவிழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. பளுதூக்கும் போட்டியின் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில், பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 115 கிலோ எடையையும் தூக்கினார். இதன் மூலம் மொத்தம் 202 கிலோ எடையைத் தூக்கி 2-ம் இடம் பிடித்த அவர், வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மீராபாய் சானுக்கு பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதலமைச்சர் பிரண் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள் பிரதமர் மோடி, மீராபாய் சானுவின் அற்புதமான நடவடிக்கையால் இந்தியா மகிழ்ச்சி அடைவதாகவும், மீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேபோன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய் சானு தனது டிவிட்டர் பகக்த்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.