ஒருவேளை இவரும் அந்தப் பக்கம் சாய்ந்து விடுவரோ?  தோனியின் செயலால் சற்று சந்தேகமடைந்த ரசிகர்கள்..!

இன்ஸ்டாவில் தனது முகப்பு படத்தை தேசியக் கொடியாக மாற்றிய தோனி..!

ஒருவேளை இவரும் அந்தப் பக்கம் சாய்ந்து விடுவரோ?  தோனியின் செயலால் சற்று சந்தேகமடைந்த ரசிகர்கள்..!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாவில் தனது முகப்பு படத்தில் தேசியக் கொடியை வைத்துள்ளார்.

75-வது சுதந்திர தினம்: நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார். இந்தாண்டு தொடக்கம் முதலே 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. 

முகப்பு பக்க தேசியக்கொடி விவகாரம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன் முதலாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைதளப்பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றி தேசியக் கொடியை ஏந்திய நேருவின் புகைப்படத்தை வைத்தார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்த தங்களது புகைப்படங்களை மாற்றி தேசியக் கொடியை பதிவிட்டனர். 

சமூக வலைதளப் பக்கத்தில் தோனி: இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரசிங் தோனி, சமூக வலைதளங்களில் அவ்வளவு ஆக்டிவாக இருக்க மாட்டார். உதாரணத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தனது இன்ஸ்டாவில் ஓய்வு குறித்த அறிவிப்புக்கு ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதன் பிறகு 2021-ம் ஆண்டு ஜனவரியில் தனது ஸ்டாபெர்ரி தோட்டம் குறித்த வீடியோவை பதிவிட்டிருந்தார். 

முகப்பு பக்கத்தை மாற்றிய தோனி: இந்த நிலையில், தோனி தனது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாவில் முகப்பு புகைப்படத்தை தேசியக் கொடியாக மாற்றியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக பெரும் பங்காற்றியவர் தோனி. ஆகையால் அவருக்கு நாட்டின் பற்று நிச்சயம் இருக்கத் தான் செய்யும். ஆனாலும் கூட எங்கு அவரும், பாஜக பக்கம் சென்று விடுவாரோ என்ற சந்தேகம் மக்களிடத்தில் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி கட்சியிலும் மற்றும் கவுதம் கம்பீர் பாஜகவிலும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.