நாங்களும் மனிதர்கள் தான் எங்கள் மீது குப்பைகளை கொட்டாதீர்கள்: ரசிகர்கள் விமர்சனத்துக்கு மேக்ஸ்வெல் பதிலடி...

நடப்பு தொடரில் இருந்து ஆர்சிபி அணி வெளியேறியதை தொடர்ந்து, சமூகவலைதளங்களில் அந்த வீரர்களை இணையவாசிகளை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அதற்கு அந்த அணி வீரர் மேக்ஸ்வெல் பதிலடி கொடுத்துள்ளார்.

நாங்களும் மனிதர்கள் தான் எங்கள் மீது குப்பைகளை கொட்டாதீர்கள்: ரசிகர்கள் விமர்சனத்துக்கு மேக்ஸ்வெல் பதிலடி...

பெங்களூரு ஆகிய இரு அணிகள் விளையாடி விளையாடியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க வீரர் படிக்கல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலி 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரைன் பந்தில் போல்ட் ஆனார். இவரைத்தொடர்ந்து ஸ்ரீகர் பாரத், மேக்ஸ்வெல் நரைன் ஓவரில் கேட்ச் கொடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக பெங்களூர் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

கொல்கத்தா அணியில் சிறப்பாக சுனில் நரைன் 4, பெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் பெங்களூரு அணி தோல்விக்கு ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இதற்கு பதிலளித்து தனது சமூகவலைதள பக்கங்களில் மேக்ஸ்வேல் பதிவை போட்டுள்ளார்.

அதில் கிரேட் சீசன் ஆர்சிபிக்கு. ஆனால் எங்கு இருக்க வேண்டுமோ அந்த இடத்துக்கு கொஞ்சம் பின் தங்கி விட்டோம். ஆனால் இந்த பிரமாதமான சீசன், எங்கள் ஆட்டத்தை யாரும் அபகரிக்க முடியாது. ஆனால் சமூக ஊடகங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. உண்மையில் இது வெறுப்பை ஏற்படுத்துகிறது. நாங்களும் மனிதகள்தான்.. எங்களின் சிறந்த பங்களிப்பை தினமும் செய்து வருகிறோம்.

டீசண்டாக நயநாகரீகத்துடன் நடந்து கொள்ளுங்கள், அவதூறு பரப்பாதீர்கள். ஆனால் சில உண்மையான ரசிகர்களுக்கு நன்றி, அவர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகடன் பட்டிருக்கிறோம். ஆனால் சில படுமோசமான மனிதர்கள் சோசியல் மீடியாவில் இருக்கின்றனர், இந்த பயங்கர மனிதர்களால் சோசியல் மீடியா என்பதே ஒரு பயங்கர இடமாக மாறி வருகிறது.

இதை ஏற்க முடியாது. தயவு செய்து அவர்களைப் போல் யாரும் இருக்க வேண்டாம். என்னுடைய நண்பர், அணியின் சகவீரரையோ நீங்கள் அவதூறு செய்தால் நீங்கள் பிளாக் செய்யப்படுவீர்கள். ஒரு அசிங்கமான நடத்தையில் என்ன பெருமை இருக்க முடியும். இதற்கு எக்ஸ்கியூஸ் கிடையாது.