தேசியக்கொடியை ஏந்திச்செல்லும் மேரி கோம், மன்பிரீத் சிங்...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில், இந்தியா சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்ல உள்ளனர்.

இந்தியா சார்பில் 115 வீரர், வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வாகியுள்ள நிலையில், வரும் 14ஆம் தேதி இந்திய வீரர்கள் டோக்கியோ செல்ல உள்ளனர். வழக்கமாக ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில், அனைத்து நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் விளையாட்டு அரங்கினுள் அணிவகுத்து செல்வார்கள். அப்பொது ஒவ்வொரு அணியிலும், முதலில் வரும் ஒருவர் தங்கள் நாட்டின் தேசியக்கொடியை ஏந்தி செல்வார்.

இந்த முறை பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் நோக்கில், ஒரு ஆண், ஒரு பெண் என குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசியக்கொடிகளை ஏந்தி செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் பஜ்ரங் புனியா தேசியக்கொடியை ஏந்தி செல்ல உள்ளார்.