இந்திய அணியில் மீண்டும்  இணைந்த எம்.எஸ்.தோனி...

ஐபிஎல் கோப்பை வாங்கிய 48 மணி நேரத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆலோசகராக   இணைந்துள்ளார்.

இந்திய அணியில் மீண்டும்  இணைந்த எம்.எஸ்.தோனி...

சிஎஸ்கே அணியை 4வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்ற தோனி 48 மணி நேரத்தில் இந்திய அணியை டி20 உலகக்கோப்பையை வெல்ல வைப்பதில் தன்னை அணியுடன் இணைத்துக் கொண்டார், பயிற்சியாளர்களுடன் ஆலோசனையில் இறங்கினார். 

விராட் கோலி டி20 கேப்டனாக கடைசியாகப் பணியாற்றும் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்குரிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று இங்கிலாந்தைச் சந்திக்கிறது. வலுவான இங்கிலாந்தை முறியடிக்க மெண்ட்டாராக சிஎஸ்கே சாம்பியன் கேப்டன் தோனி இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

இவர் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாலர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் ஆகியோருடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டார், தோனியின் இம்பேக்ட் என்னவென்பது இன்றைய வார்ம் அப் போட்டியில் அணித்தேர்வு முதல் உத்தி வரை தெரிந்து விடும்.