ரொனால்டோ தெரியும்.. மெஸ்சி தெரியும்.. சுனில் சேத்ரி தெரியுமா? ஃபிபா கௌரவித்த அந்த இந்திய வீரர் யார்?

தற்போதைய சர்வதேச வீரர்களில் அதிக கோல்கள் அடித்த வீரர் சுனில் சேத்ரி..!

ரொனால்டோ தெரியும்.. மெஸ்சி தெரியும்.. சுனில் சேத்ரி தெரியுமா? ஃபிபா கௌரவித்த அந்த இந்திய வீரர் யார்?

கால்பந்து:

கிரிக்கெட் வீரர்களை தாண்டி பிற விளையாட்டு வீரர்களின் பக்கமும் நமது கவனம் திரும்பியுள்ளது. அதேபோல பிற விளையாட்டுகள் குறித்தான படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. கிரிக்கெட்க்கு அடுத்தப்படியாக மக்களால் பெரிதும் ரசிக்கப்படுவது பார்க்கப்படுவது கால்பந்து எனலாம். 

இந்த வீரருக்கு கௌரவம்:

ஆயினும் கூட நமக்கெல்லாம் கால்பந்து என்றாலே நினைவுக்கு வருவது ரொனால்டோ, மெஸ்சி என வெளிநாட்டு வீரர்கள் தான். ஆனால் இந்திய வீரர் ஒருவரை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா பாராட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை சீரிஸ் ஆகா வெளியிட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

சுனில் சேத்ரி:

உண்மையாகவே அது நடந்திருக்கிறது. இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. கடந்த 2005-ம் ஆண்டு கால்பந்து போட்டிகளில் அறிமுகமாகி, தற்போது வரை கிட்டத்தட்ட 131 போட்டிகளில் இந்தியா சார்பில் விளையாடியுள்ளார். சர்வதேச அரங்கில், தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்த பட்டியலில் இவர் 3 வது இடத்தில் உள்ளார். 

3-வது இடத்தில் சுனில்:

போர்ர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 117 கோல்கள் அடித்து முதல் இடத்தையும், 90 கோல்களுடன் அர்ஜெண்டினாவின் லியனோ மெஸ்சியும், இவர்களுக்கு அடுத்தப்படியாக 84 கோல்களுடன் இந்திய வீரர் சுனில் சேத்ரி பிடித்துள்ளார். இவரை கௌரவிக்கும் விதமாக ஃபிபா அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் சீரிஸ் தொகுத்துள்ளது. 

சுனில் குறித்து சீரிஸ்:

3 பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள அந்த சீரிஸ் குறித்து ஃபிபா தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் அனைவருக்கும் ரொனால்டோ, மெஸ்சி குறித்து அனைத்தும் தெரியும். அதே சமயம் தற்போதுள்ள வீரர்களில் அதிக கோல் அடித்த மூன்றாவது வீரர் இந்தியாவின் சுனில் சேத்ரி குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளது. 

ரசிகர்கள் ஆதரவு:

சுனில் சேத்ரியின் தொடக்க காலம் முதல், சர்வதேச அணிகளில் விளையாடியது, கோப்பைகளை வென்றது, உட்சபட்ச வெற்றி என அனைத்தையும் 3 பகுதிகளில் அடக்கி வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பு ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.