தோனியை விட அதிக விலை போன ஜடேஜா!! காரணம் இதுதான? தோனியின் மாஸ்டர் பிளான்!!..

சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், டு பிளிஸ்சிஸ் உள்ளிட்ட வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்

தோனியை விட அதிக விலை போன ஜடேஜா!! காரணம் இதுதான? தோனியின் மாஸ்டர் பிளான்!!..

ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் தங்கள் அணியில் உள்ள வீரர்களில் யார்? யாரை? தக்கவைக்கிறது என்பதை அறிவிப்பதற்கான கெடு நிறைவடைந்தையடுத்து, அணியில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்து உள்ளது.

 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகிய மூவரை தக்க வைத்துள்ளது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இந்திய வீரர் பேட்ஸ்மேன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் ஆகியோரும் தக்கவைத்துள்ளனர். ஐ.பி.எல் ஏலத்திற்கு அந்த அணியிடம்  57 கோடி மீதம் உள்ளது.

மும்பை அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் மும்பரா, பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், ஆல்ரவுண்டர் கிரன் பொள்ளாடு ஆகியோரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன் அணியில் 3 இந்திய வீரர்களும் ஒரு வெளிநாட்டு வீரர்களும் தக்கவைத்துள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக பேட்ஸ்மேன் மாயங் அகர்வால் , வேகப்பந்து வீச்சாளர் அர்சப்த் சிங் அது இருவரை தக்க வைத்துள்ளன.

அந்த வகையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி ஆகியோரை தக்கவைத்துள்ளது. இதில் ஜடேஜாவை 16 கோடி ரூபாய் கொடுத்தும், டோனியை 12 கோடி ரூபாய் கொடுத்தும், மொயீன் அலியை 8 கோடி ரூபாய் கொடுத்தும், ருதுராஜன் கெய்க்வாட்டை 6 கோடி ரூபாய் கொடுத்தும் தக்கவைத்துள்ளது.

மேலும் இது தோனியே எடுத்த முடிவாக இருக்கலாம். தற்போதைய ஃபார்மை கருத்தில் கொண்டு முதல் வீரராக ரீட்டெயின் செய்ய தகுதியடையவர் ஜடேஜா என தோனியே முடிவெடுத்திருக்கலாம்.

ஆனால், 2022 சீசனோடு தோனி ஓய்வுபெறும்பட்சத்தில் மினி ஏலத்தில் சென்னைக்கு கூடுதலாக 12 கோடி மட்டுமே கிடைக்கும். அதேநேரத்தில், இங்கே தோனியை 16 கோடிக்கு ரீட்டெயின் செய்திருக்கும்பட்சதில், தோனி ஓய்வு பெற்ற பிறகு மினி ஏலத்தில் சென்னைக்கு 16 கோடி கிடைத்திருக்கும்.

தோனி 2022 சீசனோடு ஓய்வு பெறும்பட்சத்தில் சென்னைக்கு 4 கோடி நஷ்டம் ஏற்படும் என்றும் அப்படி தோனி ஓய்வு பெறும் பட்சத்தில் சென்னை அணிக்கு அடுத்த கேப்டனாக ஜடேஜாவை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.