அயர்லாந்து டி-20 தொடர் - இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

அயர்லாந்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து டி-20 தொடர் - இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

17 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கவுள்ளது. 

டப்ளின் நகரில் வரும் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணிக்கு துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காயத்திலிருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பி உள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி கவனம் ஈர்த்த ராகுல் திரிபாதிக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி விவரம்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.