செவிதிறன் குறைபாடு உடையோருக்கான சர்வதேச தடகள போட்டி... தமிழகத்தை சேர்ந்த மூவர் தேர்வு!

42 நாடுகளின் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் செவிதிறன் குறைபாடு உடையோருக்கான சர்வதேச தடகள விளையாட்டு போட்டியில் பங்கேற்க போகும் வீரர்களுக்கு டெல்லியில் பாராட்டு விழா  நடைபெற்றது.

செவிதிறன் குறைபாடு உடையோருக்கான சர்வதேச தடகள விளையாட்டு போட்டி வரும் 23 முதல் 28 வரை போலாந்து நாட்டில் நடைபெறவுள்ளது.மொத்தம் 42 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டியில் இந்திய வீரர்கள் 8  பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்  தமிழகத்தை சேர்ந்த . மணிகண்டன் , சுதன் மற்றும் சமீக பர்வீன்  ஆகியோர் தடகள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்  டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு  வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சமீகா பர்வீனின் தாயார் சலாமத், ஒன்றரை மாதங்களுக்கு முன்பே தனது மகளுக்கு  பயிற்சி அளிக்க தொடங்கி இருக்க வேண்டும், ஆனால்  எந்த பயிற்சியும் அளிக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.  பயிற்சி இல்லையென்றாலும் நிச்சயம் தனது மகள் பதக்கம் வெல்வார் என அவர்  நம்பிக்கை தெரிவித்தார்.