இந்தியாவின் கால்பந்து கூட்டமைப்பு உரிமையை ரத்து செய்த பிஃபா.. உச்சநீதிமன்றம் சென்ற மத்திய அரசு..!

விதிமுறைகளை தொடர்ந்து மீறியதாக இந்தியா மீது பிஃபா குற்றச்சாட்டு..!

இந்தியாவின் கால்பந்து கூட்டமைப்பு உரிமையை ரத்து செய்த பிஃபா.. உச்சநீதிமன்றம் சென்ற மத்திய அரசு..!

இந்தியாவுக்கு தற்காலிக தடை: இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ரத்து செய்துள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA-வின் விதிமுறைகளை மீறியதோடு, மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக, FIFA தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு FIFAவின் நிர்வாகக் குழு ஒரு மனதாக ஒப்புதல அளித்துள்ளது.

இடம் குறித்து ஆலோசனை: இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியை வேறு எங்கு நடத்துவது என்பது குறித்து FIFA ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை: இந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. அந்த வழக்கை அவசர வழக்காக விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.