பெண்கள் கிரிக்கெட்டில் மிதாலிராஜ் சாதனை... சச்சின் சாதனையை சமன் செய்தார்..!

கிரிக்கெட்டில் மிக நீண்ட காலம் விளையாடி வருபவர் என்ற உலக சாதனையை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் படைத்துள்ளார்.

பெண்கள் கிரிக்கெட்டில் மிதாலிராஜ் சாதனை... சச்சின் சாதனையை சமன் செய்தார்..!
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஆண்டுகள் விளையாடிய வீரர்களின் பட்டியலில் சச்சின் பெயர் மட்டுமே இருக்கிறது. இவர் மொத்தம் 22 ஆண்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி மூலம், மிதாலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் 22-வது  ஆண்டில் அடியெடுத்து வைத்து, சச்சின் சாதனையை தொட்டுள்ளார்.
 
ஆண்களை பொறுத்தவரை சச்சின் இந்த சாதனையை படைத்திருக்கும் நிலையில் பெண்கள் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் முதல்முறையாக இந்த உலக சாதனையை படைத்திருக்கிறார். 1999ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி, தனது 16-வது வயதில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் மிதாலி ராஜ்  அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.