ராணுவக் காவல் படையில் பணிக்கு சேர்ந்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை..!

பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் குத்துச்சண்டையில் வென்கலப் பதக்கம் வென்றவர் ஜாஸ்மின்..!

ராணுவக் காவல் படையில் பணிக்கு சேர்ந்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை..!

அரசு வேலையில் வீரர்கள்:

பொதுவாக விளையாட்டு போட்டிகளில் மாநில, தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்களை பெறும் வீரர்களுக்கு இந்தியாவில் மத்திய அல்லது மாநில அரசு வேலைகள் வழங்கப்படுவது வழக்கம். பெரும்பாலும் ரயில்வே துறையில் விளையாட்டு வீரர்களை நம்மால் காணமுடியும். 

வெண்கலம் வென்ற வீராங்கனை:

ஆனால் இவற்றிற்கு மாற்றாக காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவர் ராணுவத்தில் இணைந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில், குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டவர் ஜாஸ்மின் லம்போரியா

ராணுவக் காவல் படையில் வேலை:

இதில் 60கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட ஜாஸ்மின் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இவர் தற்போது ராணுவத்தின், ‘மிஷன் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ராணுவக் காவல் படையில் ஹவில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.