இவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியா! படு தோல்வியை தழுவியது வெஸ்ட் இண்டீஸ்!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியா!  படு தோல்வியை தழுவியது வெஸ்ட் இண்டீஸ்!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரின் அபார சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 123 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 109 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டியேந்த்ரா டாட்டின், ஹேலே மேத்யூஸ் இணை நல்ல தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை100 ரன்கள் சேர்த்த நிலையில், டியேந்த்ரா டாட்டின் 46 பந்துகளில் 62 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஹேலே மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 40 புள்ளி 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.