உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று சாதனை!!

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று சாதனை!!

உலக கோப்பை வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உலக கோப்பை வில்வித்தை 3-ம் நிலை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி துல்லியமாக அம்புகளை எய்தது.

இந்த ஜோடி 152-149 என்ற புள்ளி கணக்கில் பிரான்சின் ஜீன் பிலிப் போல்ச்- சோபி டாட்மோன்ட் இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.