அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 யில் இந்தியா அபார வெற்றி!!

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 யில் இந்தியா அபார வெற்றி!!

இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டி-20 போட்டி, டப்ளினில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹேரி டெக்டார் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

பின்னர், 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 9 புள்ளி 2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய தீபக் ஹுடா, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 47 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 3 ஓவர்கள் பந்துவீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய சாஹல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.