6 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வேயுடன் மோதும் இந்தியா.. மீண்டும் அணிக்கு திரும்பிய வீரர்கள்..!

தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி..!

6 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வேயுடன் மோதும் இந்தியா.. மீண்டும் அணிக்கு திரும்பிய வீரர்கள்..!

3 ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி ஹராரேயில் இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது. 

மீண்டும் அணிக்கு திரும்பிய வீரர்கள்: காயத்தில் இருந்து குணமடைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.எல்.ராகுலும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் அணிக்கு திரும்பி உள்ளனர். இப்போட்டியில், ஷிகர் தவானும் சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. 

வெற்றி முனைப்பில் இந்தியா: சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் விக்கெட் கீப்பராக இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.  இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

6 ஆண்டுகளுக்கு பிறகு மோதல்: இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடைபெறுவதால், இன்றைய ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.