சுமார் 28 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் இந்தியா- பாகிஸ்தான்

துபாயில் நடைபெறுகின்ற 20 ஓவர் உலகக்கோப்பை  போட்டியில் சுமார் 28 மாதங்களுக்கு பிறகு இந்திய பாகிஸ்தான் அணிகளும் நேரடியாக மோதவுள்ளன. இதனால் இருநாட்டு ரசிகர்ளும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பிரபலமாக உள்ள விளையாட்டு கிரிக்கெட். அதிலும் இரண்டு நாடுகளும் நேரடியாக மோதும் போது, அது வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்கப்படு வதில்லை. பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்சனை, அரசியல் மோதல் உள்ளிட்ட ஒட்டுமொத்த பகைக்கும் பழி தீர்க்கும் யுத்தகளமாக, கிரிக்கெட் போட்டி பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் பெறும் வெற்றி, யுத்தத்தில் பெறும் வெற்றியாகவே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

அதற்கு இன்று  நடைபெற போகும் போட்டியும் விதிவிலக்கல்ல. சுமார் 28 மாதங்களுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக மோத உள்ளன. கிரிக்கெட் வரலாற்றில், 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில், இதுவரை ஒருமுறை கூட இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது இல்லை. இந்நிலையில் இந்த வரலாற்றை மாற்றி எழுத பாகிஸ்தானும், சாதனையை தக்க வைக்க இந்தியாவும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயத்தில் டிவிட்டர், பேஸ்புக் துவங்கி துபாய் வரை இரு நாட்டு ரசிகர்களும் இன்றே வார்த்தைப் போர்களைத் துவங்கி விட்டனர்.