ஐபிஎல்... ராகுல் அதிரடியால் பஞ்சாப் அணி இமாலய வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் , பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்...   ராகுல் அதிரடியால் பஞ்சாப் அணி இமாலய வெற்றி

ஐ.பி.எல். கிரிகெட்டின் 53-வது லீக் ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது.  டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளிசிஸ் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளிசிஸ் களமிறங்கினர்.இருவரும் சிறப்பான துவக்கம் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ருதுராஜ் 12 ரன்கள் எடுத்த நிலையில் 4 வது ஓவரில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  மற்றொரு ஆட்டக்காரரான டுபிளிசிஸ் நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைதொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் அணியின் ரன்வேகம் கணிசமாக குறைந்தது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய டூ பிளெசிஸ் அரை சதம் அடித்தார்.

இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது.  135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப். தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

 4 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்ததால், 5-வது ஓவரில் ஷர்துல் தாக்குர் அறிமுகப்படுத்தப்பட்டார். இதற்குப் பலனாக அகர்வால் 12 ரன்னிலும், சர்பிராஸ் கான் ரன் எடுக்காமலும்  அந்த ஓவரில் ஆட்டமிழந்தனர். 

அதன்பிறகு, ஷாருக் கான், மார்கிரமும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.மறுபுறம் அதிரடியாக விளையாடிய ராகுல். மீண்டும் தனது அதிரடியைத் தொடர்ந்தார்.ஒரு கட்டத்துக்குப் பிறகு சிக்ஸர்கள் மூலம் ரன் குவிக்கத் தொடங்கியதால் பஞ்சாப் மாபெரும் வெற்றிக்குத் தயாரானது.

13 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.