விறுவிறுப்பான கட்டத்தில் ஐபிஎல் தொடர்: கையில் கால்குலேட்டருடன் சுற்றும் 3 அணி ரசிகர்கள்...

14-வது ஐபிஎல் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் ஒரு இடத்துக்கு  மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

விறுவிறுப்பான கட்டத்தில் ஐபிஎல் தொடர்: கையில் கால்குலேட்டருடன் சுற்றும் 3 அணி ரசிகர்கள்...

14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. பின்னர் அப்போழுதுதான் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள போட்டிகளை  செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்தது பிசிசிஐ.  இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்டில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எந்த அணி எந்த இடத்தில் உள்ளது என்பதை பற்றி தற்போது பார்போம்

இதில் கடந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி ”கம்பேக் நா இப்படிதான் டா இருக்கனும்னு கெத்து காட்டியுள்ளது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 லீக் போட்டிகளில் 9 வெற்றிகள், 3 தோல்விகள் என 18 புள்ளிகளுடன் முதல் அணியாக ப்ளே ஆஃப்சுற்றுக்குள் நுழைந்தது. இதனையடுத்து ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 12 போட்டிகளில் 9 வெற்றிகள், 3 தோல்விகள் என 18 புள்ளிகளுடன் 2-வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்நிலையில் ஷார்ஜாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் 3-வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது.

ப்ளே ஆஃப் சுற்றில் 4 அணிகள் மோத வேண்டியநிலையில் 3 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் 4-வது இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதில் கடும் போட்டி நிலவுகிறது.

இதில் எந்தெந்த அணிகளுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்று பார்க்கலாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. வரும் 7-ம் தேதி நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறைவான ரன்னில் சுருட்டி, அதை குறைந்த ஓவரில் வென்று இந்த உயர்ந்த ரன் ரேட்டை கொல்கத்தா அணி தக்கவைக்க வேண்டும். ஆனால் கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோற்றுவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கடினம், அவ்வாறு தோற்றாலும் ரன்ரேட்டை உயர்த அளவில் முடிக்க வேண்டும்.

ஏனென்றால், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் தோல்வி அடையும்பட்சத்தில், கொல்கத்தா அணி நிகர ரன்ரேட் உயர்வாக இருந்தால், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லலாம். இதனால் கொல்கத்தா அணிக்கு ரன்ரேட், வெற்றி முக்கியம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் இரு போட்டிகள் மீதமுள்ளன. கொல்கத்தா அணியுனுடன் ஒரு போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நாளை ஒரு போட்டியிலும் ராஜஸ்தான் மோதுகிறது.இந்த இரு ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணி வெல்ல வேண்டும். மும்பை அணியை ராஜஸ்தான் அணி தோற்கடிக்கும் பட்சத்தில் மும்பை அணி தொடரிலிருந்து வெளியேறும். ஒருவேளை ராஜஸ்தான் அணி மும்பையிடம் தோற்றுவிட்டு, கொல்கத்தா அணிக்கு எதிராக வியாழக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தாவை ராஜஸ்தான் வெல்லும் பட்சத்தில் 3 அணிகளும் தலா 12 புள்ளிகள் என்ற ரீதியில் வரும்.அப்போது, நிகர ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி செல்ல வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க ராஜஸ்தான் அணி நல்ல ரன்ரேட்டில் வெல்வதும் அவசியமாக உள்ளது.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 7வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் மைனஸ்-0.453 என்ற ரீதியிலல் இருக்கிறது. அடுத்த இரு போட்டிகளிலும் மும்பை அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரன்ரேட்டை உயர்த்திக்கொண்டால் ப்ளேஆஃப் செல்ல வாய்ப்புள்ளது.இதனால் 3 அணி ரசிகர்களும் கையில் கல்குலெட்டரை வைத்து சுற்று வருகின்றனர்.