ஐ.பி.எல். கிரிக்கெட் : ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் : ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டம், துபாயில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சஹா டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, ஜேசன் ராய் 10 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன், 26 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனையடுத்து, களமிறங்கிய ஐதராபாத் அணி வீரர்கள், கொல்கத்தா அணியினரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், சொற்ப ரன்களில் அவுட் ஆகி அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்கள் மட்டுமே எடுத்தது.

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த, அவருடன் விளையாடிய வெங்கடேஷ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 7 ரன்களிலும், நிதீஷ் ராணா 25 ரன்களிலும், கில் 57 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தினேஷ் கார்த்திக் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 19 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. இதனால், அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.