IPL 2021: 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் த்ரில் வெற்றி…  

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

IPL 2021: 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் த்ரில் வெற்றி…   

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 52-வது லீக் போட்டி, அபுதாபியில் உள்ள சேக் சாயீத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். இதில் அபிஷேக் ஷர்மா 13 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்து வந்த கேன் வில்லியம்சனுடன் ஜேசன் ராய் ஜோடி சேர்ந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் பட்டிக்கல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேனியல் கிரிஸ்டனும் 1 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரீகர் பாரத் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தேவ்தத் பட்டிக்கலுடன், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சீரான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்துவந்தநிலையில், மேக்ஸ்வெல் 40 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பட்டிக்கல் 41 ரன்களில் கேட்ச் ஆனார்.  இறுதியாக பெங்களூரு அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.