6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை விழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி...

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை விழ்த்தி  பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி...

ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், ஒன்பதாவது ஓவரை வீசிய ஹென்ரிக்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து பெங்களூரு அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இருப்பினும், மேக்ஸ்வெலின் அதிரடியான ஆட்டத்தால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 164 எடுத்தது.165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி 10 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை தந்தது.

இந்நிலையில், ஷாபாஸ் அகமது வீசிய 11 ஓவரில் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது. இருபதாவது ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 12 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதையடுத்து, பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற பெங்களூரு, 3வது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.