ஐபிஎல்- மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி போராடி வெற்றி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

ஐபிஎல்- மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி போராடி வெற்றி

ஐபிஎல் 46-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் மும்பை அணியின் தொடக்க வீரராக ரோஹித், டி காக் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரோகித் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்காமல் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்தார். 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். இந்நிலையில், பிரித்வி ஷா 6 ரன்னிலும், தவான் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் இறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 26 ரன்னில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுக்க டெல்லி அணி நெருக்கடிக்கு உள்ளாகியது. இருப்பினும் பொறுமையாக நிலைத்து நின்று ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், அனுபவ வீரர் அஸ்வினுடன் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்த டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.