ஐசிசி சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருது அறிவிப்பு!

ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருது அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாதந்தோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த ஐசிசி விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவர் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர்களாக நியூசிலாந்து அணியின் அறிமுக வீரர் டேவன் கான்வே, வேகப்பந்து விச்சாளர் கைல் ஜேமிசன், தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதில் டேவன் கான்வே இங்கிலாந்து அணிக்கெதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இரட்டை சதமடித்து சாதனை படைத்தார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி பட்டத்தை வெல்ல உதவியாக இருந்தார். தென் ஆப்பிரிக்க அணியின் குயின்டன் டி காக், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து தொடரை வெல்ல காரணமாக அமைந்தார்.

மேலும் ஜூன் மாதத்திற்கான மகளிருக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ரானா மற்றும் ஷபாலி வர்மாவும் இங்கிலாந்தை சேர்ந்த எக்லேஸ்டோனும் தேர்வு செய்ய பட்டுள்ளனர்.