மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணி திரில் வெற்றி..!

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 3 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணி திரில் வெற்றி..!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்தது. அதிகபட்சமாக திரிபாதி 44 பந்துகளில் 76 ரன் விளாசினார். இதனையடுத்து, 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.