ஐபிஎல் புதிய அணிகள் மூலம் பிசிசிஐ-க்கு இத்தனை கோடி லாபமா ?

ஐபிஎல் புதிய அணிகள் மூலம் பிசிசிஐ, 12 ஆயிரத்து 715 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் புதிய அணிகள் மூலம் பிசிசிஐ-க்கு இத்தனை கோடி லாபமா ?

 ஐ. பி.எல். கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ. பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுகின்றன. அதன்படி அகமதாபாத், லக்னோ புதிய அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் கோல்கட்டாவை சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சீவ் கோயங்காவின் ஆர். பி.எஸ்.ஜி. குழுமம் லக்னோ அணியை 7 ஆயிரத்து 90 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதேபோல் லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்ட சிவிசி நிறுவனம் அகமதாபாத் அணியை 5 ஆயிரத்து 625  கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனையடுத்து பி.சி.சி.ஐ-க்கு புதிய 2 அணிகள் மூலம் 12 ஆயிரத்து 715 கோடி வருவாய் கிடைத்துள்ளது.